பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47


உள்ளத்தைத் தெய்வம் ஒன்றே என்னும் தெளிவு பெறச் செய்தலும், அங்ஙனம் தெளிந்த தொண்டர்களைச் சிந்தையும் தெளிவுமாகித் தெளிவினுள் சிவமுமாகிப் பேரின்பத்தைப் பெற்றுமகிழும் சிவநெறியாகிய செந்நெறிக்கே ஏற்றுதலும் முழுமுதற்கடவுளது திருவருளின் திறமாகும்.

இவ்வுண்மையினை,

போற்றுந் தகையன பொல்லா முயலகன் கோபப்புன்மை
ஆற்றுத் தகையன ஆறுசமயத் தவரவரைத்
தேற்றுந் தகையன தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே
ஏற்றுந் தகையன இன்னம் பரான்றன் இணையடியே

(4–99–7)

எனவரும் திருவிருத்தத்தில் அப்பரடிகள் விளக்கியுள்ளமை காணலாம். இவ்வாறு எல்லாச் சமயத்தாராலும் மேற்கொள்ளப் பெறும் வழிபாடுகள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு அவ்வவர்க்கு அவ்வவர் தெய்வமாய்த் தோன்றி அருள்புரியும் சமயங்கடந்த தனிமுதற் பொருளாகவே சிவநெறிச் செல்வர்கள் இறைவனைப் போற்றி வந்துள்ளார்கள். இச்செய்தி,

பரிதியானைப் பல் வேறு சமயங்கள்
கருதியானைக் கண்டார் மனமேவிய
பிரிதியானைப் பிறர் அறியாத தோர்
சுருதியானைக் கண்டீர் தொழற்பாலதே.

(5—94–5)

எனவரும் திருநாவுக்கரசர் அறிவுரையானும்,