பக்கம்:திருவருட்பா-11.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 4 திருவருட்பா

இந்தக் குறிப்புகளே எல்லாம் நம் ஐயா புனிதர் களக்கரம் நோக்கி நல் அமுதாக்கி’ என்னும் தொடரில் அமைத்து விட்டனர்.

இறைவி மெய்ஞ்ஞான வடிவினள். இதனேப் பெரியநாயகி அம்மை நெடுங்கழி நெடில் அடி ஆசிரிய விருத்தத்தில் கட்டு தற்கு அரிய நின்னே மெய்ஞ்ஞான சொரூபி என்று அருமறை அனைத்தும் சொல்லுவது உண்:ை என் நன்குனர்ந்தேன்’ என்று கூறி இருப்பது கொண்டு தெளிக. இதனுல்தான் அவள் தன்னை வழிபடும் மெய்யன் பக்கட்கு மெய்ஞ் ஞானத்தை அளித்து ஆள் பவளாக விளங்குகின்றாள். இதனே நம் வள்ளலார், மெய்ஞ்ஞானத் தனிச்சுகம்தான் வரநோக்கி ஆள் மயிலே’ என்று இறைவியை விளித்தனர். (32)

உன்னும் திருஒற்றி யூர்உடை யார்நெஞ் சுவப்பவழில் துன்னும் உயிர்ப்பயிர் எல்லாம் தழைக்கச் சுகக்கருனே என்னும் திருஅமு தோயாமல் ஊற்றி எமதுளத்தில் மன்னும் கடைக்கண் மயிலே வடிவுடை மாணிக்கமே.

(பொ. - ரை.) மெய்யன் பர்களால் எப்போதும் நினைக் கப்படுகின்ற திருஒற்றியூர்த் தியாகப் பெருமானது மனம் மகிழ, அழகு பொருந்திய உயிர்களாகிய பயிர்கள் எல்லாம் தழைக்க இன்பக் கருணே என்னும் சிறந்த அழு தத்தை இடை விடாமல் ஊற்றி எங்கள் உள்ளத்தில் நில இபற்றிருக்கின்ற கடைக்கண் பார்வையால் திருவருள் புரிகின்ற மயிலே! வடிவுடை மாணிக்கமே!” (எ , து)

(அ - சொ.) உன்னும் - நிக்னக்கும். உவப்ப - மகிழ. எழில் - அழகிய. துன்னும் . பொருந்திய. மன்னும் - திலேத்து இருக்கின்ற.

(இ - கு.) நெஞ்சு-உவப்ப, அமுது + ஓயாமல் எனப் %,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/104&oldid=681583" இலிருந்து மீள்விக்கப்பட்டது