பக்கம்:திருவருட்பா-11.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலே 1 g :

வர்கள் எட்டுத் திக்குப் பாலகர்கள் போக மிகுதியாக உள்ள பன்னிரு சூரியர், பதினொரு உருத்திரர், சந்திர சூரியர்கள் ஆவர். இவர்களுடன் எட்டுத்திசைப் பாலகர்களேச் சேர்க்க முப்பத்து மூன்றுகோடி தேவர் ஆவார். இவர்களேயே முப்பத்து முக்கோடி தேவர் என்பர். இந்த உண்மையினே நம் குமரகுருபரர், இருவர், எண்மர், பதினொருவர், பன்னிருவர் எனும் விண்ணவர்கள் முப்பத்து மூவரே” என்று உணர்த் துதல் காண்க.

இறைவியை எல்லாத் தேவரும் நினைத்து வழிபடுகின் றன்ர் என்பதை நம் ஐயா இப் பாடலில் உணர்த்துகின்றனர். மேலும் நம் வள்ளலார், இறைவியை எப்போதும் நினைப்பவர் கள் நீண்ட ஆயுளேப் பெற்று வாழ்வர் என்பதையும், நினத்து வழிபடாதவர்கள் செத்துச் செத்துப் பிறந்து பிறந்து துன்புறுவர் என்பதையும் அறிவித்துள்ளனர்.

இறைவியை உள்ளத்தில் நினையாதவர்கள் எய்தும் நிலையை அபிராமி அந்தாதி, “தோத்திரம் செய்து தொழுதுமின் போலும்நின் தோற்றம்.ஒரு மாத்திரைப் போதும் மனத்தில்வை யாதவர் வண்மைகுலம் கோத்திரம் கல்வி குணம்குன்றி நாளும் குடிகள்தோறும் பாத்திரம் கொண்டு பலிக்குழ லா நிற்பர் பார்ளங்குமே”

என்று கூறுதலேயும் உணர்க. (37)

திருநாள் நினைத்தொழும் நல்நாள் தொழாமல் செலுத்தியநாள் கருநாள் எனமறை எல்லாம் புகலும் கருத்தறிந்தே ஒருநா வினும்தின் தனை மற வார்.அன்பர் ஒற்றியில்வாழ் மருநாள் மலர்க்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.

(யொ ரை.) திருஒற்றியூரில் வாழ்கின்ற மணம் பொருந்திய புதிய மலர்களே அணிந்துள்ள கூந்தலையுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/111&oldid=681593" இலிருந்து மீள்விக்கப்பட்டது