பக்கம்:திருவருட்பா-11.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ 2.6 திருவருட்பா

என்று பாடுகின் ருர். ஆனல் நம் வள்ளலார் ஈண்டு இறைவர், இறைவியின் இயற்கை மணத்தின் இன்பத்தை என்றும் உடன் இருந்தே துய்க்க வேண்டும் என்பதற்காக மணந்து கொண்டார் என்று கூறி இருப்பது படித்து இன்புறுதற் குரியது ; இந்தக் குறிப்பை நம் ஐயா வாக்காகிய ‘உன் மணம் காதலித்தது” என்னும் தொடரால் அறிக. (48)

துன்னும் சராசரம் யாவையும் சன்றது சூழ்ந்தும் உன்னை இன்னும் இளந்தை அழியாத கன்னிகை என்பதென்னே மன்னும் சுகாநந்த வாழ்வே வடிவுடை மணிக்கமே.

பன்னும்பல் வேறண்டம் எல்லாம்.அவ் அண்டப் பரப்பில்நின்று.

(பொ. ரை.). நிலைபெற்ற இன்பமும், மகிழ்ச்சியும் நிறைந்து விளங்கும் வாழ்வரசியே வடிவுடை மாணிக்கமே! பலவாறு சொல்லப்படும் வெவ்வேரு ைஅண்டங்களே எல்லா வற்றையும், அந்த அண்டங்களின் பரப்பில் நிறைந்து நெருங்கி வாழ்கின்ற அசையும் பொருள்கள் அசையாத பொருள்கள் எல்லாவற்றையும் பெற்றெடுத்து அவற்றைச் சூழ்ந்து இருக்கும் உன்னை இன்னமும் வேதங்கள் இளமை அழியாத கன்னி என்று போற்றுகின்றனவே ! இதன் கருத்து என்னே !’’ (எ . து.)

(அ - செ.) மன்னும் - நிலைபெற்ற பன்னும் - பலமுறை சொல்லுகின்ற அண்டம் - உலகங்கள். துன்னும் - நெருங்கி இருக்கும். சரம் அசையும் பொருள்கள். அசரம் - அசை யாப் பொருள்கள். கன்னிகை - இளம்பெண். இளந்தை - இளமை,

(இ.கு.) சுகம் + ஆனந்தம். சரம் டி அசரம், என்று பிரிக்க. சரம் அசரம், சுகாநந்தம் உம்மைத் தொகை.

(வி-ரை.) இறைவி இன்பத்தையும் ஆனந்தத்தையும் தன் வடிவாகக் கொண்டு விளங்குதலின் சுகானந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/136&oldid=681623" இலிருந்து மீள்விக்கப்பட்டது