பக்கம்:திருவருட்பா-11.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

w வடிவுடை மாணிக்கமாலே

இந்தப் போக்கினே உளங்கொண்டே நம் ஐயா, தம் பாமலேயைத் திருஒற்றியூர் வடிவுடை மாணிக்க அம்மையாக் மீது அன்புடன் பு:னந்து அவ்விறைவியார் திருவடிகளில் சூட்டியுள்ளனர். இதனே அவர் தம் திருவாக்கிளுலேயே வடிவ ம்பிகை மலர் அடிக்குத் தார்கொண்ட செந்தமிழ்ப் பாம்ால் சாத்த’ என்று காப்புச் செய்யுளில் குறித்துள்ளனர். நம் வள்ளலார் இறைவியின்மீது இம்மாலேயே அன்றித் தில்லேச் சிவகாமி அம்மையின் மீது திருப்பதிகம் என்னும் தலப்பில் ஒர் அடிக்குப் பதிகுறு சிக் கொண்ட கழிநெடி லடி ஆசிரிய விருத்தமாகப் பத்து விருத்தப் பாடல்களைப் பாடியுள்ளனர். மேலும் இந்தச் சிவகாமி அம்மையின் மீதே சிற் சத்தி துதி என்னும் தலைப்பில் அறுசீர்க் கழிநெடிலடி விருத்தப்பாவில் பத்துப் பாடல்களைப்பாடி புள் ளனர். திருவதிகையில் திருக்கோயில் கொண்டுள்ள பெரியநாயகி மூன்று பாடல்களைப் பாடியுள்ளனர். அவற்றுள் முதல் தோத்திரப்பா கலி விருத்தத்தால் ஆயது. ஏனைய இரு தோத்திரப் பாடல்கள் பன்னிரு சீர்களால் அமைந்த கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தால் ஆனவை.

இவ்வாறு இறைவிமீது பாடப்பட்ட பாடல்களுள் பத்திச் சுவையும், இலக்கியச் சுவையும், நகைச் சுவையும் நிறைந்த நூல், வடிவுடை மாணிக்க மாலயே ஆகும்.

இதில் இறைவன், இறைவியின் சொருப தடத்த லட்ச ணங்களும், இறைவியின் இறைமைப் பண்பும், இம்மைப் பயனுடன் அம்மைப் பயன் அடைதற்குரிய வழிவகைகளும் பொதிந்து விளங்குவதை நன்கு உணரலாம். முழுமையும் இறைவியினைப் பல பெயர்களால் விளித்துப் பாடப்பட்ட பாடல்கள் பல இதில் உள்ளன. இந்த உண்மைகளே இனி வரும் பாடல்களிலும், உரை விளக்கங்களிலும் காண்போமாக.

திருச்சிற்றம்பலம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/15&oldid=681638" இலிருந்து மீள்விக்கப்பட்டது