பக்கம்:திருவருட்பா-11.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலே 7.

(விரிவுர்ை.) காப்பு என்பது வட மொழியில் இரட்சை என்று கூறப்படும். புலவர்கள் தாம் ஒரு நூலப் பாடத் தொடங்கும்போது, அந்நூல் இனிது முடிதல் பொருட்டுத் காம் வழிபடு கடவுளே வணங்கித் தொடங்குதல் தொன்று தொட்ட மரபாக வந்துகொண்டிருக்கிறது. இவ்வாறு பாடி வரும் மரபைத் தற் சிறப்புப்பாயிரம் என்றும் கூறுவர். தற். சிறப்புப் பாயிர மாவது,

‘தெய்வ வணக்கமும் செயப்படு பொருளும் எய்த உரைப்பது தற்சிறப்புப் பாயிரம்’

என்பது. இந்த இலக்கண மரபை ஒட்டியே சீர்கொண்ட ஒற்றிப்பதி” என்னும் காப்புச் செய்யுள் பாடப்பட்டுள்ளது. ‘தமியேனுக்கு ஏர் கொண்ட நல் அருள் ஈயும் குளுலய ஏரம்பனே’ என்பது தெய்வ வணக்கம், வடிவாம்பிகைதன் மலரடிக்குத் த கொண்ட செந்தமிழ்ப் பாமாலை சாத்த’’ என்பது செயப்படுபொருள். வடிவாம்பிகை என்பது திருவொற்றியூர்த் திருத்தேவியாரின் திருப்பெயர்.

திருஒற்றியூர் தொண்டை நாட்டுப் பாடல் பெற்ற சைவத் தலங்கள் முப்பத்திரண்டனுள் ஒன்று. இது சென்னைக்கு SJL36 ஐந்து கல் தொலைவில் உள்ளது. இத்தலத்தை அடைய பேருந்தி (பஸ்) வண்டிகளும், இரயில் வசதியும் உண்டு.

திருஒற்றியூர் என்று இத்தலம் வழங்கப்படுதற்குரிய காரணம் மிகவும் வியத்தற்குரியதாகும். மாந்தாதா என்னும் சூரிய வம்சத்து மன்னன், தான் செய்த சிவ புண்ணிய வசத்தால் ஆயுள் நீடிக்கப் பெற்றான். அதல்ை, மூப்பு மிகுதியும் உற்றுத் துன்புறலான்ை. அந் நிலையில் தான் அளித்துவந்த கோயில்களின் படித்தரத்தைக் குறைக்குமாறு ஒலே எழுதினன். அங்வனம் தினசரிப் படித்தரத்தைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/17&oldid=681660" இலிருந்து மீள்விக்கப்பட்டது