பக்கம்:திருவருட்பா-11.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலை 35

(பொ-ரை.) பர்வதராசன் தவஞ்செய்து பெற்றெடுத்த அத்தே! திருஒற்றியூரில் வாழும் பொன்மலையை வில்லாக வ8ளத்த சிவபெருமான் திருமணம் செய்துகொள்ள அவர்க்கு அளித்துக் கொண்டிருக்கும் தெய்வீக மலரே! அலைகள் மிகுந்துள்ள திருப்பாற் கடலில் யோக நித்திரை செய்துகொண்டிருக்கும் திருமால் வணங்குகின்ற அருமை வாய்ந்த தேவா முதமே! மீன் பிடித்து வாழும் செம்படவனுக்கு அருமை மகளாகப் பிறந்த மகளே! வடிவுடை மாணிக்கமே.” (எ . து.)

(அ - சொ.) மலையான் . மலே அரசன். கனகம் - பொன். சில வில், கனகச் சிலையான் - பொன் மலையை வில்லாக வளைத்த சிவபெருமான். மலி - மிகுந்த. கடல் பள்ளிகொண்டான் - திருப்பாற்கடலில் உறங்கும் திருமால். ஆர் அமுது - அருமையான தேவாமுதம்.

(இ . கு.) அலையால் -- மலி அருமை + அமுது. எனப்பிரிக்க,

(வி - ரை.) இறைவி மலையரசனுக்து மகளாய்த் தோன் றியது அவன் மகிழ மட்டும் அன்று. அகில சராசரங்களும் நல்வழிப் படவே ஆகும். இந்த உண்மையினை அமுதாம் பிகை பிள்ளைத் தமிழ்,

மனம் வாக்கில் எட்டாத சிற்சத்தி ஆயிடினும்

மன்பதைகள் உய்யவேண்டி மலே அரையன் முதலோர் இடத்தவ

தரித்தொரு மடப்பிள்ளே யாய் வருதலால்’ என்று கூறும் கருத்தால் புலனுகிறது.

மலையான் தவம் கிடந்து உமையைப் பெற்றதைக் கந்தபுராணம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/45&oldid=681742" இலிருந்து மீள்விக்கப்பட்டது