பக்கம்:திருவருட்பா-11.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 திருவருட்டா

(பெ. . ரை.) சிறந்த தேன் நிறைந்த மலரைச் சூடிய கூந்தலையுடைய மானே! வடிவுடை மாணிக்கமே! சோலையில் தேன் பொருந்திய மலர்கள் நிறைந்த அழகிய திருஒற்றியூரில் எழுந்தருளியுள்ள உன் நாதராம் படம் பக்கநாதர் இடுப்பில் மட்டமான கந்தையைச் சுற்றிக்கொண்டு நிற்பதைக் கண்டும் சிறிதும் இரக்கம் காட்டாதவர்கள் போல நீமட்டும் பட்டாடை உடுத்திக் கொள்கின் ருயே! நீ உன் நாயகனிடம் கொண்டுள்ள அன்பு இத்தகையதுதான?” (எ . து.)

(அ - சொ.) மா - சிறந்த மட்டு . தேன். குழல் - கூந்தல். கா - சோலே. இரங்கலர் - அன்பு காட்டாதவர். நேயம் - அன்பு.

(இ . கு.) மா, உரிச்சொல்.

(வி - ரை.) நம் ஐயா காலத்தில் சிற்சில கோவில்களில் உள்ளி திருவுருவங்களுக்கு நல்ல துணிகள் உடுத்தப்பட வில்லை. கந்தைகளே உடுத்தப்பட்டு வந்தன. இதற்குக் காரணம் நிர்வாகமே ஆகும். நம் வள்ளலார் பாடி எனப்படும் திருவலிதாய திருத்தலத்தைக் கண்டு வணங்கச் சென்ற போதும், அத்தலத்துப் பெருமானும் கந்தையே உடுத்தி இருந்தனர். இந்த உண்மையினே நம் ஐயா மனம் உருகி,

திரைப டாத செழுங்கட லேசற்றும் உரைப டாமல் ஒளி செய்பொன் னே புகழ் வரைப டாது வளர்வல்லி கேசநீ தரைப டாக்கந்தை சாத்திய தென்கொலோ’
பன்னு வார்க்கரு ளும்பர மேட்டியே மன்னு மாமணி யே வல்லி கேசனே உன்ன நீஇங்குடுத்திய கந்தையைத் துன்னு வார்.இக்ல யோபாஞ் சோதியே'
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/76&oldid=681776" இலிருந்து மீள்விக்கப்பட்டது