பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 1 திருவருட் சிந்தனை

தவறுகளை ஒப்புக்கொள்ளும் மனம் தத்தருள்க

இறைவா! தாயிற் சிறந்த தயாவுடைய தலைவனே: என்னைப் பயம்’ என்ற இருட்டறையில் இருந்து மீட்டுக் காப்பாற்றி யருள்க!

இறைவன் , என் பயம் என்னைப் பேயாகிப் படைத் தாட்டுகிறது! என்னுடைய பயம் எதையும் எதிர் மறையாகவே ஆராயத் தூண்டுகிறது; பயம் என்ற சூழ்நிலையில் சிக்கித் தவிக்கின்ற நிலையில்தான் நான் நல்லவனல்லன்.

இவன் நல்லவனல்லன். தோல்வி வரும். துன்பம் சூழும் என்றெல்லாம் நினைத்து நானே முடிவுகளையும் எடுத்துக் கொண்டு, அரண்ட நிலையில் வாழ்நாளைத் கழித்துக் கொண்டிருக்கிறேன். -- - - -

நான் ஏன் பயப்பட வேண்டும்? பயம். மனிதனைக் கொன்று விடுகிறது. மனிதனின் ஆக்கத்தை ஆழிக்கிறது. சுற்றத்தை அழிக்கிறது. ஆதலால் பயத்திலிருந்து மீள்வதே என் முதல் பணி! --

நான் பயத்தால் இழக்கும் இழப்பே மிகுதி பயத்திற்குப் பதிலாக தான் உண்மையுடன் வாழ்ந்தால் - தவறு நிகழ்ந்து விட்ட நிலையில் அதனை ஒத்துக் கொள்வதில் முன் நின்று மன்னிப்புக் கேட்டால் நான் பிழைத்து விடுவேனே! இறைவா, என்னைப் பயத்திலிருந்து மீட்டுக் கர்ப்பாற்று:

தவறுகளுக்குக் காரணமாகிய அறியாமை, அகந்தையி: விருந்து காப்பாற்று! தவறுகள் நிகழ்ந்து விட்டால் தைரிய் மாகத் தவறுகளை ஒத்துக் கொள்ளும் மனப்பான்மையைத் தா!

தவறுகளை நினைந்து வருந்தி மன்னிப்புக் கேட்கும் இயல்பினைத் தா! இறைவா, என்னைப் பயத்திலிருந்து மீட்டு வீரம் செறிந்த வாழ்க்கையில் செலுத்தியருள்க! இறைவா, அருள் செய்க!