பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் * 113

இறைவா,நன்மையே ஒழுக்கமாய் அமைந்திய அருள்க

- =

இறைவா, எனக்கு எத்தனையோ ஆர்வ நிலைகள். ஆம், இறைவா! எல்லாம் நன்மையைச் சார்ந்த ஆர்வங் கள்தாம், ஆனாலும் அடைவு இல்லை, மகிழ்ச்சி இல்லை, ஏன் இறைவா?

நன்மையை எண்ணினால் போதுமா? எழுதினால் போதுமா? சொன்னால்போதுமா? நன்மை, செயல்களாக ஒழுக்கங்களாக மாறி வளர வேண்டும், அப்போதுதான் நன்மையால் பயன் உண்டு.

அலைகடல் போல் அலையும் மனத்தில் உள்ளத்தில் தன்மை வேரூன்றி நிற்காதே அலைக்கழிவு செய்யுமே! இந்த நிலைகளில் வெற்றி பெற வேண்டும்.

ஊன்றிய உணர்வு தேவை ஒரு நெறிப்பட்ட செயல், நன்மையாகவே அடிைத்த ஒழுக்கம்-இவையே வாழ்வின் ஆக்கம். இறைவா, இவற்றை எனக்கு அருள் செய்க:

தீமையை வெற்றி கொள்ள, தன்மையாலேயே முடியும். எண்ணத்தில் நன்மை. சொல்லில் நன்மை. செயலில் தன்ம்ை. தன்மையே ஒழுக்கம். ஒழுக்கமாய் அமைந்தது நன்மை, இறைவா, அருள் செய்க!

இறைவா, தன்மையே ஒழுக்கமாய் அமைந்திட அருள் செய்க: - -