பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1 I 9

- SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS A SAS SSASAMMeeAMMMMMAAAA

என் வாழ்க்கையில் மனித நேயத்தை அருள்க!

இறைவா, வள்ளற்பெருமான், ஒருமையுடன் நினது திருவடி நினைக்கும் வரம் வேண்டினார். இறைவா, ஒருமை உணர்வு எளிதில் வர மறுக்கிறதே. ஆம்.

இறைவ! ! பொறிகளின் அராஜகம் ஒரு புறம். புலன்களின் சேட்டை ஒருபுறம்.

  • நான், ’’ எனது’ என்று நஞ்சேறிய நாணயமற்ற செயல்கள், ஆணவத்தின் அட்டகாசம், மொழி, இனம், மதம் என் பவற்றின் பெயரால் வளரும் பகைகள், இத்தனையும் என்னை நிலைகுலையச் செய்கின்றன. -

இறைவா, ஒருமை உணர்வு அரும்பவில்லை. அரும்ப மறுக்கிறது. ஒருமைப் பாட்டுணர்வினைத் தந்து ஆட் கொள். -

ஆம், இறைவா, நீ சொல்வது முற்றிலும் உண்மை தான். வேற்றுமையில் ஒற்றுமை காணும் உயர் பண்பாடு தோல்வி, கண்டுள்ளது...ஏன், இறைவா?

ஒரும்ைப்பாட்டின் ஆதரசுருதி மனிதநேயம்தான் எல்லாரையும் மனிதர்களாக மதிப்பதுதான். மனிதர்களிடம் அன்பு காட்டுவதுதான்; ‘உன்னைப் போல் பிறரை நினை. இறைவா நல்லமந்திரம் கற்றுக் கொடுத்து அருளி உள்ளனை! -

இண், என் வாழ்க்கையின் ஆதார சுருதி மனித நேய மாகத்தான் இருக்கும். புற நிலையில் ஒருமை நிலை கண்டு விட்டால், அகநிலை ஒருமை தான்ே வந்தமையும்.

ஆம்.இறைவா என்.வாழ்க்கையில் மனித நேயத்தை அருள் கெய்க: :