பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



தவத்திரு குன்றக்குடி அடிகளார் 187

என் தரத்தை உயர்த்தும் இயல்பினை அருள்க!

இறைவா, வித்தின்றியே விளைவு செய்யும் இறைவா! எனக்கு ஆசைகள் அதிகம். ஆம்! நிறைய பொருள் வேண் டும். ஆம்! பொருள் வேண்டும்.

ஆனால், முயற்சியின்றியே நிறைய பொருள் கிடைக்க வேண்டும். அதுவும் நீயே கொடுத்துவிட்டால் முழுநிறைவு. இப்படி என் மனம் எண்ணுகிறது! இது தவறு என்பதை

உணர்கிறேன். நடவாதது, நடக்கக் கூடாதது என்பதையும் உணர்கிறேன்.

ஆனால், கடின உழைப்பினை ஏற்க மறுக்கிறது! இறைவா, என்னைத் திருத்து. எங்குக் கடின உழைப்பில் லையோ அங்குச் செல்வம் சேராது. சேர்ந்தாலும் நிற்காது என்ற தத்துவத்தை என் வாழ்க்கையின் அனுபவமாக்கும் அறிவினைத் தந்ததுள் செய்க!

உழைப்பே தவம்: உழைத்தல் மூலமே உரிமை கால் கொள்கிறது என்ற உண்மைகள் என் வாழ்க்கையின் உண் மைகளாக விளங்க அருள் செய்க:

பொருளைப் போற்றி வாழ்தலினும் என்னுடைய தரத்தை தான் உயர்த்திக் கொள்ளுதல் சிறப்புடையது. இறைவா அருள் செய்க: