பக்கம்:திருவருட் பயன்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



77

களும், தாம் முதல்வனருளாற் காரியப்படுதலை அறியமாட்டா என்பது உணர்த்துகின்றது.

ஐந்தும் ஆற்றோனில் அணுகுதுணை அறியா; (அதுபோல) உயிர், உணர்வை உணரா என இயையும். ஐந்தும் என்றது, ஐம்பொறிகளை; இனைத்தெனவறிந்த பொருளின் கண் வந்தமையின் உம்மை முற்றும்மை. அணுகுதுணை-அகலாது தன் பக்கத்தில் நெருங்கிவரும் துணை. ஆற்றோன்-வழிச்செல்வோன். 'ஆற்றோனில்' என்புழி, இல் என்பது உவமவுருபு. உயிர்-ஆன்மாக்கள்; சாதியொருமை.'உணர்வு’ என்றது. உயிர்க்குயிராய் நின்றுணர்த்தும் திருவருளை.

உயிர்களின் வழிநின்று காரியப்படும் பொறிகள் ஐந்தும் (நெருங்கித் தொடரும் துணைவனை அறியமாட்டாத) வழிச் செல்வோன்போலத் தமக்கு முதலாய் நின்றுணர்த்தும் ஆன்மாவை அறியமாட்டா; அதுபோலவே ஆன்மாக்களும் தமக்கு உயிர்க்குயிராய் நின்றுணர்த்தும் திருவருளை அறிய மாட்டா என்பதாம்.

வழிச்செல்வோன் தனக்குத் தோன்றாத்துணையாய் உடன் வரும் தன்துணைவனை உணராதவாறு போலவும், ஐம்பொறிகள் தமக்கு முதலாய் நின்றுணர்த்தும் ஆன்மாவை உணராதவாறு போலவும், ஆன்மாக்களும் தமக்குத் தோன்றாத்துணையாகவும் முதலாகவும் உள்ள திருவருளின் உண்மைனை உணரமாட்டாதனவாயின என எடுத்துக்காட்டினமையால், இவை துணைமையுந் தலைமையும் பற்றிவந்த எடுத்துக் காட்டுவமை எனக் குறித்தார் நிரம்ப அழகிய தேசிகர். 'ஐந்தின்' என்பது, அவர்கொண்ட பாடமெனத் தெரிகிறது.

வழிப்போக்கன் தன்பின் தோன்றாத் துணையாய்த்தொடர்ந்துவரும் தன் துணைவனை அறியாதிருத்தலும், தனக்கென்று அறிவில்லாத ஐம்பொறிகள் தம்மை இயக்கிநிற்கும்