பக்கம்:திருவருட் பயன்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 வினேப்பயன்களைச் செய்த உயிர்களே நுகருமாறு சென்று சேரும் உணர்வு வினைகட்கு இன்மையானும், உயிர்கள் செய்த வினேப்பயன்களே அவ்வுயிர்களே நுகர்ந்து கழிக்குமாறு வரை யறுத்து நுகர்விப்பவன் இறைவன் ஒருவனே என்பது சைவ சமயச் சான்ருேர்களின் துணிபு என்பார் சேர்ப்பவன்’ என அம்முதல்வனேக் குறித்தார். ஆன்மா உளணுதலாவது, இரு வினேகளேச்செய்து அவற்றின் பயன்களே இறைவன் நுகர்விக் கத் தான் நுகர்தற்கு உரியனுதல், - 'செய்வினேயுஞ் செய்வானும் அதன் பயனுஞ் சேர்ப்பானும் மெய்வகையால் நான்காகும் விதித்தபொருள் எனக்கொண்டே இவ்வியல்பு சைவநெறி அல்லவற்றுக் கில்லே’ என உய்வகையாற் பொருள் சிவன் என்றருளாலே உணர்ந்திருந்தார்’ (பெரிய புராணம்-சாக்கிய-5) எனச் சாக்கிய நாயனர் உணர்ந்ததாகச் சேக்கிழார் பெருமான் அறிவுறுத்திய சைவசமயச் செம்பொருளே அவ் வாறே எடுத்துரைக்கும் முறை யில் உமாபதிசிவம் இக் குறட்பாவை அருளிச் செய்துள்ளமை அறிந்து போற்றத் தகுவதாகும். இனி, உய்வானும் உளனென் றுணர்’ எனப் பாடங் கொண்டு மோட்சத்தையடைகிறவனும் உண்டு என்றறிவா யாக’ எனச் சிந்தனேயுரையிற் காணப்படும் உரை வெண்டளே பிழைத்தலானும் மெய்வகையால் நான்காகும் விதித்த பொருள்” என்ருங்கு நான்கென்னுந் தொகையினேத் தெளிவாக உணர்த்தாமையானும் இந்நூலாசிரியர் கருத்துக்கு ஏற்புடையதாகத் தோன்றவில்லே. "செய்வினே செய்வான் செயன்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளங் கொளல்’’ (577) என வருந் திருக்குறள் ஈண்டு நினைவுகூரத்தகுவதாகும், இங்குக் கூறப்படும் நால்வகைப் பொருளேயும் உய்தி பெறுவாகிைய ஆன்மா தானே அறிவனே என வினவிய