பக்கம்:திருவருட் பயன்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 இ-ள். பலவாய பொருள்கள் தம் பன்மை தோன்ருது ஒரு படித்தாயிருத்தல், ஒளியின்கண்ணும் இருளின்கண்ணும் ஒக்கத், தெளிந்து கிற்றலும் மருண்டு கிற்றலுமாய செயல்கள் அவ்விடத்துப் பேகம். இதஞல், அருளோடு கூடிகிற்றல் ஒருவகையால் இருளோடு கூடிகிற்றல்போலும் என்பது கூறப்பட்டது. பிறிதொன்றுத் தோன்ருதென்பது கருத்து. விளக்கம்: ஆன்மா, திருவருளோடு பிரிவறக்கூடி யுணருமாறு கூறுகின்றது. பன்மை-பலவாய பொருள்களின் தன்மை. ஒருமைத்து ஒருபடித்தாயிருத்தல். தெளிவு-தெளிந்த மெய்யுணர்வுடன் கூடியிருத்தல். தெளியார்-இருளின்கண்ணே மருண்டு நிற்போர். ஒளியுடன்கூடித் தெளிந்து நிற்றலும், இருளுடன் கூடி மருண்டு நிற்றலுமாகத் தம்தம் செயலால் வேறுபடுவ தன்றி, உலகப் பொருள்கள் யாவும் ஒரு நிகரனவாதல் ஒளியின் கண்ணும் இருளின்கண்ணும் ஒக்கும் என்பதாம். “அந்தகர்கண்ணுக்கு ஆதித்தப்பிரகாசமும் அந்தகாரமும் ஒருபடித்தாயிருக்கும்; பதி பசு பாசங்களுடைய தன்மையை விளங்க அறியாதவர்களுடைய செய்தியும் அப்படிப்போல’ என இதற்குப் பொருள் உரைப்பர் சிந்தனேயுரையாசிரியர், இங்ங்னம் பொருள் கூறுங்கால் இக்குறட்பா எடுத்துக் காட்டுவமை யணியமைந்ததாகக் கொள்க. ஆன்மா ஆணவ இருளிற்கூடி அதன் தன்மையதாய் ஒற்றித்து நின்றவாறு போல, அருளிற் கூடியநிலையில் அவ்வருளொளியின் தன்மையாய் ஒற்றித்து நிற்கும் என்பது, "ஆணவத்தோ டத்துவித மானபடி மெய்ஞ்ஞானத் தானுவினே டத்துவிதஞ் சாருநாள் எந்நாளோ?