பக்கம்:திருவருட் பயன்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 இத் திருவைந்தெழுத்தில்ை அறிவுறுத்தப்பெறும் பொருள் கள் யாவை என வினவிய மானுக்கர்க்கு அவற்றை முறைப் பட மொழிவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 82. இறைசத்தி பாசம் எழில்மாயை ஆவி உறகிற்கும் ஓங்காரத் துள். இ.ள்: சிவனும், சத்தியும், ஆணவமும், அழகுடைத் தாய மாயையும், ஆன்மாவும் ஆகிய ஐக்கம் ஐந்தெழுத்து ஒரெழுத்தாகிய பிரணவத்துள்ளே அமைந்த கிற்கும். இதனல், பிாணவம் என்று பேர்பெற்று நிற்கும் துண் னிய ஐக்கெழுக்கினது இயல்பு கூறப்பட்டது. விளக்கம்: திருவைந்தெழுத்தில்ை உணர்த்தப்பெறும் பொருள்கள் இவையென உணர்த்துகின்றது. ஒங்காரத்துள், இறை, சத்தி, பாசம், எழில்மாயை, ஆவி உறநிற்கும் என இயையும். பிரணவம் எனப்படும் ஓங்காரம், திருவைந்தெழுத்தின் நுண்ணிய நிலேயேயன்றிப் பிறிதன்மை பின் ஓங்காரத்துள் ஐந்தும் உற நிற்கும் என்ருர். ' உய்ய என் னுள்ளத்துள் ஒங்காரமாய் நின்ற மெய்யா (சிவபுராணம்) என்பது திருவாசகம். இறை-சிவம். சத்தி-அருள். ஈண்டுப் பாசம் என்றது, உயிரை அதிையே பிணித்துள்ள ஆணவ மலத்தினே. உயிர்கள் தநுகரண புவனங்களுடன் விரும்பித் தங்கிப் போகம் நுகர்தற்குரிய விருப்பத்தினே வளர்க்கும் நிலை யில் பல்வகையானும் அழகுடையதாய்த் திகழும் இயல்பு மாயையின் கண்ணது என்பார், அதனே எழில்மாயை' என அடைகொடுத்தோதினர். ஆவி.உயிர். உற-பொருந்த, பதி பசு பாசம், என்று சொல்லப்பட்ட மூன்று முதலும் இறை, சத்தி, பாசம், மாயை, ஆவி என ஐந்து வ கையாக