பக்கம்:திருவருட் பயன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

தாய் உயிர்களை அணுத்தன்மைப்படுத்தி நிற்கும் ஆணவமலமாகிய உள்மாசினையே தெய்வப்புலவர் திருவள்ளுவரும் சைவத்திருமுறையாசிரியர்களும் 'இருள்' என்ற சொல்லால் வழங்கியிருத்தல் வேண்டும் எனத் தெளியவுனர்ந்த உமாபதி சிவாசாரியார், சைவசித்தாந்த ஆசிரியர்களால் ஆணவம் என்ற பெயரால் வழங்கப்படும் மூலமலத்தின் இயல்பினை விரித்துக் கூறும் இவ்வதிகாரத்திற்கு 'இருள்மல் நிலை’ எனப் பெயரிட்டுள்ளார்.

ஆணவமலம் என்பது, எண்ணிறந்த உயிர்களோடும் கூடி நின்று மறைத்தும் தான் ஒன்றாயிருப்பது; உயிர்களின் பக்குவம், பக்குவமின்மை ஆகியவற்றுக்கு ஏற்ப அவரவர் இடங்களிலே மறைத்து நின்று அந்தந்த ஆன்மபோதங்களின் மீட்சியிலே நீங்குவதாயிருக்கிற தன் செயல்வகையாகிய எண்ணிறந்த சத்திகளையுடையது. செறிந்த இருளும் வெளியென்று சொல்லும்படி நின்று உயிர்களுக்கு மிக்க மறைப்பினைச் செய்வது; செம்பினுடன் கூடியுள்ள களிம்பானது அந்தச் செம்பு உள்ள அன்றே அதனை மறைத்து உள்ளும் புறம்புங் கலந்து வெட்டுவாய்தோறும் நின்றாற்போல, உயிரறிவோடுங் கலந்து மறைந்து நிற்கிற அழியாத அனாதிமலமாய் உயிர்களின் விழைவு அறிவு செயல் என்னும் மூவகையாற்றல்களும் சிறிதும் நிகழாதபடி மறைத்து நிற்பது. இதன் இயல்பினை,

     'ஏகமாய்த் தம்கால எல்லைகளின் மீளும்
         எண்ணரிய சத்தியதாய் இருளொளிர இருண்ட
      மோகமாய்ச் செம்பினுறு களிம்பேய்ந்து நித்த;
         மூலமலமாய் அறிவு முழுதினையும் மறைக்கும்’
                                               (சிவப். 20)

எனவரும் சிவப்பிரகாசத் திருவிருத்தத்துள் இந்நூலாசிரியர் சுருக்கமும் தெளிவும் பொருந்த விளக்கியுள்ளார். இச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/73&oldid=514769" இலிருந்து மீள்விக்கப்பட்டது