பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் 2-GГ

கின்ற, சேதா - செவ்விய பசுவானது, தழைஅடுத்த - தழையை யேக்கிய, இடையர் - ஆயர்கள், பற்று - பிடித்து ஊதுகின்ற, குழல் இசைக்கு - புல்லாங்குழலின் இசைக்கு, மனம் உருக்கி - மனதை உருகச்செய்து, தளரும் - இாங்குகின்ற, மாலை-ம்ாலைக் காலமானது, பிழை அடுத்தமொழி - பிழைபொருந்திய வார்த் தைகளை, உரைத்த - கூறிய, தலைவருக்கு - நாயகருக்கு, மிக இரக்கம் - என்மேல் மிகுந்த இாக்கத்தை, பிறப்பியாது - உண்டாக்காது.

தோத்திரப் பிரபந்தங்களில் அகப்பொருட் கிளவித்துறை. களை இடையிடையே கூறுதல் கவிசமயமாதலே இலக்கியங் கொண்டுணர்க. இங்ஙனம் வெளிப்படையாகக் கூறுகின்ற சிற் றின்பத்துறைச் செய்யுட்கெல்லாம் பேரின் பத்தின் பாற்படுத் தும் உள்ளுறைப் பொருளுமுண்டு; அவற்றைக் கற்றுவல்ல ஆன் ருேர்பால் கேட்டுணர்க. கடுத்தின்னதானக் கட்டியூசிக் கடுத் தின்பிப்பார் போல, சிற்றின் பங்கடறும் வகையாற் பேரின் பத் தைக் காட்டி நாட்டுதல் என்ப. இச்செய்யுள் தலைவன் கார்ப்பரு வங் கண்டும் வாராமை கருதி, தலைவி மாலைக்காலங்கண் டிரங் கிக் கூறல்,

குழை - குண்டலம்; தானியாகுபெயர். சிவபிரானது திரு மேனியில் இடப்பாகம் உமைபாகம் ஆகையால் குழையடுத்த விழி என்ருர். விழி --- சினையாகுபெயர். சேதா, செம்மை + ஆ எனப்பிரிவுபடும்; செம்மை யென்னும் பண்பின் மை விகுதி கெட்டு முதனிண்டு முன்னின்ற மெய்திரிந்தது. செம்மை - உறுப்பிலக்கணத்தின் நன்மை, அன்றி நிறமுமாம். மடி - வயிறு என்னும் பொருள்படுதல் படியை மடியகத்திட்டான்' என் னும் நான்மணிக்கடிகையானுணர்க. அன்றி, முலைமடி யெனினு மாம். நனைக்கவென்னும் செயவெனச்சம் காணப்பொருட்

டாய் இறந்தகாலங் காட்டியது. மழுப்படை வலது கையி