பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும். டுக

கிருப்பதும்) மகாம் மென்குழை - மகரமீன் வடிவான மிருது வாகிய தண்டலமே, வருணம்-நிறமும், மெல்குழையே - மெல் த ரிசே, மு?லயும் - தனங்களும், மந்தாமே - மந்தாகிரியே, இடிையும் - இடையும், அந்தரமே - ஆகாயமே, மொழியும் - சொற்களும், மாசுகமே-பெருமை பொருங்கிய கிளிமொழியே. லிழியும் - கண்களும், ஆசுகமே - அம்பே யாகும்.

இது தலைவன் தலைமகளது அவயவ முதலியவற்றைப் புணர்து சொல்லியது. கண்டகன் - முள்போன்றவன் எனினு மாம். கண்டகம் - முள். வரு சலந்தான் - வினைத்தொகை. சலர் தான் - நீரில் தோன்றியவன் என்று பொருள். சலந்த ான் யாவரையும் வென்று கைலாயத்தை நோக்கிச் செல்லு சையில் சிவபிரான் விருத்த பிராமண வடிவங்கொண்டு அவ னெ கிரே வந்து பூமியில் சக்காம்போற் சுற்றி அதனை எடுக்க வல்லையோவென, அவன் அவ்வாறே பெயர்த்துத் தலையில் வைக்க அது அவனைப் பிளந்தது என்றதைக் குறிக்க உடல் தடிங் கிடுவா ரென்ருர். இவ்வரலாற்றைக் காஞ்சிப்புராணம் சலந்தரீசப் படலத்தா னுணர்க.

கொளுவார் - கொள்ளுவார்; தொகுத்தல். வர்ணம் என் னும் வடசொல் வருணமென் ருயிற்று. இச்செய்யுள் மடக்கு என்னும் சொல்லணியாதல் காண்க. கடிக்கிடுவார், கடிக்கிடுவார் என்பவற்றில் இடு துணைவினை. அருணையங்கிரி என்பதில் அம் சாரியையுமாம். உலகம் என்பது தமிழ் மொழியேயா மென்பர் ஆசிரியர் நச்சினுர்க்கினியர்; லோகமென்ற வட சொல்லின் திரிபென்பாரு முளர்.

இது, ஒன்று மூன்று ஐந்து எழுசீர்கள் கருவிளச்சீரும் ஏனைய புளிமாச்சீரும் பெற்றுவந்த எண்சீர்க்கழிநெடிலாரிேய விருத்தம். (க.எ)