பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.

'அந்தணர் என்பதில் அம்-அழகு; தண்-குளிர்ச்சி. அர்-பலர்பால் விகுதி' (இராமானுச கவிராயர்பிற்காலத்தவர்) ஒருமுகமாக அம்+ தண்+அர் என்னும் சொல்லமைப் பாகக் கொண்டே பொருள் கண்டனர்.

ஆனால், மணக்குடவருக்கும், பரிமேலழகருக்கும் பின் வந்த நச்சினார்க்கினியர் தாம் படைத்த மொழியாக அந்தம்-அணவுவார் என்றமை கருதத்தக்கதாயிற்று. முன் கண்ட அவர்தம் உள்நோக்கம் இங்கும் உறுதி பெறுகிறது.

அந்தணர் வேறு, பாாப்பனர் வேறு

திருவள்ளுவருக்குப் பின்னரும் அவர் காலத்தும் இதனை உணர்ந்தோர் திருவள்ளுவரை அடியொற்றி அந்தணரை வேறாகவும் பார்ப்பனரை வேறாகவும் கண்டு பாடினர்.

"அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா'

என்று இனியவை நாற்பது(2) அந்தணர் என்போர் வீட்டில் இருந்து உணவு உண்ணாத துறவியர்' என்றது. அதே நூல்

'பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா' என்று பார்ப்பார் இல்லில் இருந்து வாழ்பவர்' என்று வேறு படுத்திப் பாடியது.

'அந்தணர் என்போர் அறவோர்'

என்றதில் அறவோர் என்பது அற உணர்வை உடையவர்: அறச்செயலை மேற்கொள்பவர் என்று பொருள்பட்டு

1. பூதஞ்சேந்தனார் : இனி : 2 2. கபிலர் : இன்னா : 2-1