பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றுவது கேடுதரும், பார்ப்பனர் அந்தணர் ஆகார் என்ற கருத்தேற்றமும் அந்தணர் நூல் நான்மறையாகாது என்ற பொருள் தோற்றமும், உழுதொழில் இழிதொழில்' என்று ஆரியர் எழுதிய பழிப்பைப் புறந்தள்ளி உழவே தலை என்ற பெருமிதக்கருத்தும் வள்ளுவத்தில் உயர்ந்து நிற்பதை ஆய்ந்துள்ளார் இளஞ்சேரன். *

இருவினை இருள் வினை என்ற கருத்துக்களில் வள்ளுவரின் முதற்புரட்சி, மனிதனின் பெரு வலிமையும் முயற்சியும் ஊழ் எனப்படும் விதியை முந்துறும் பெருமிதக்கருத்து, ஈகையின் சிறப்பால் மேல் ஆரியர் செய்யும் ஆயிரம் வேள்வியும் தீமையாகும் என்கிற திண்மையைத் தெளிவுற இளஞ்சேரன் ஆய்வு செய்துள்ளார்.

மேல் உலகம் ஒதுக்கப்பட்ட போர்முரசம், கொல்லாமையின் முன்னே ஆரியர் செய்யும் ஆயிரம் வேள்வியும் தீமையாகும் என்கிற தோலுரிப்பு

இக்கருத்துக்களில் உள்ள வள்ளுவரின் பகுத்தளிவுத் திண்மையைத் தெளிவுற இளஞ்சேரன் ஆய்வு

செய்துள்ளார்.

மக்கள் வேண்டும் போது மழை பெய்தல் எத்துணை பயனோ அத்துணை பயன் போன்றவள் கற்புடையவள் என்று பெண்ணுக்குச் சூட்டும் புகழாரம், திங்களைப் பாம்பு கவ்வும் வானவியல் கருத்து, தனக்குத் தானே வருந்துமளவுக்குத் தீயவற்றைச் செய்தவனை நிரயம் செல்வாய் என்று அச்சுறுத்திக் கயவன் ஆக்காமல்

|v)