பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இள்ளுசேரன் 107

காதல் நோயை அறியாமல் முருகனுக்குச் செய்யும் வெறியாட்டு' .

தூண் நட்டு நெருப்புக் குழியில் செய்யும் நான்மறை" 84 (?susir 5*1?°2 .

தேவர் வாழும் மேலோர் உலகம்'

புத்தேள் உலகம்

கீழ் உலகம் என்னும் கிரயம்'

-என்னும் இவற்றை முக்கால இலக்கண இலக்கியங்களில் காண்கின்றோம். இவ்வாறு தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் காணப்படுவன என்பதால் இவை தொன்மைத் தமிழர்களின் அடிப்பட்ட பழக்கம் ஆக மாட்டா. இவை கரும்புள்ளிகளே. - * r.

இவற்றில் பல திருவள்ளுவர் திருக்குறளில் இல்லை. இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம் என வாழ்வியலை விளக்கிய திருவள்ளுவர் வாழ்வியல் விழாவாகக் கரணம்' (சடங்கு) எதையும் சொல்லவில்லை.

'கட்டு என்று குறிகேட்பது, நாள் பார்ப்பது, புள் ஒர்வது என்பவை திருக்குறளில் இல்லை’’ இவை பற்றிய எவ்வகைக் குறிப்பும் இல்லை. - - . . .

'உறுப்பு கலன் அழிதல்'

1. தொல்காப்பியர் : தொல்,

- பொருள் : 63-2 2. கூடலூர் கிழார் : புறம் : 229-22 3. மாங்குடி மருதனார் : மது. சா : 698

4. நரிவெருரூஉத் தலையார்: புறம் : 5-6