பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் - 115.

இக்குறளும் இருவினைப் பயன்களைக் குறிப்பாக ஒதுக்கும் பகுத்தறிவு முனையாகும்.

ஆனால் முதல் அதிகாரத்தில்

'இருள் சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு’ (5) என்னும் குறளில் இருவினை” என்றுள்ளது. இது ஆன்மீகத்தார் கருதும் நல்வினை, தீவினை எனும் பொருள் களைக் குறிப்பதேயாகும். குறித்தாலும் இவற்றைத் திருவள்ளுவர் ஏற்றுக்கொண்டார் என்று கொள்ள வழியில்லை. இருவினை’ என்பதற்கு அடைமொழியாக அவர் வைத்த 'இருள்சேர்’ என்பது கொள்ளும் வழியை அடைத்து விடுகின்றது. திருவள்ளுவர் கருத்துப்படி நல்வினையும் இருள் சேர்ப்பது-துன்பம் தருவது. தீவினை யும் இருள் சேர்ப்பது-துன்பம் தருவது. இரண்டாலும் பயன் இல்லை என்பதே.

தொடக்க அதிகாரத்தில் உள்ள குறளிலேயே இரு வினையை இருட்டாக்கிய திருவள்ளுவர்தம் எழுதுகோல் பகுத்தறிவு முனை கொண்டதாகும்.

ஊழ்

தலை எழுத்து

- 'ஊழ் என்பது இப்போது விதி' எனப்படுகிறது. விதிப் படிதான் நடக்கும்’ என்னும் நம்பிக்கை மிகப்பெரும் பாலோரிடம் நிறைந்துள்ளது. இதில் பகுத்தறிவைப் பயன் படுத்தும் முனைப்பே இல்லை எனலாம். -

‘ஊழ்' என்னும் சொல் முறை, மலர்ச்சி, பழமை, குணம், பகை, முதிர்ச்சி எனப் பல பொருள்களைத் தரும்.