பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

ஆனால், சங்க இலக்கியம் தவிர பிற நூல்கள் அனனத்தும் 'விதி' என்ற பொருளையே மிகுதியாகக் காட்டுகின்றன.

திருவள்ளுவர் அறத்துப்பாவின் இறுதியில் ஊழ்' என்று ஓர் அதிகாரம் அமைத்துள்ளார். இப்போது கொள்ளும் விதி' என்னும் சுருத்தில்தான் அவ்வதிகாரம் கருத்தை விரிக்கிறது. ஊழை, ஆக்கும் ஊழ் 'ஆகூழ்” என்றும், போக்கும் ஊழ் போகூழ்” என்றும்,இழப்பை ஏற் படுத்தும் ஊழ் இழவூழ்” என்றும் ஊழின் செயற்பாட்டைக் காட்டுகிறார். செயற்பாட்டைக் காட்டுவது மட்டுமன்றி ஊழின் வல்லமையை அடுக்கி அடுக்கிக் காட்டியுள்ளார்.

ஊழின் பெரு வலிமை -

'ஆகூழ்' அயர்ச்சியில்லாத முயற்சியைத் தரும்” (371) 'போகூழ் சோம்பலை உண்டாக்கும் (371) 'இழவூழ்' அறிவுள்ளவனையும் பேதையாக்கும்(372)

இழவூழ் ஆக்கிய பேதைமையை ஆகூழ் வந்தால்

அகற்றும்(372)

நுண்ணிய நூல்களைக் கற்றாலும் ஊழல் அமைந்த அறிவே மேம்படும் (373)

செல்வ வளமும் அறிவு நலமும் ஊழால் வேறு

வேறாய் அமையும் (374)

ஊழில் நல்லவை தீமையாகும்; தீயவை நன்மை யாகும் (375) ஊழால்தான் செல்வம் நிலைக்கும்; நிலைக்காமல் போகவும் போகும் - (376)

கோடி கோடியாய்ச் சேர்த்தாலும் நல் ஊழ் இருந்தால் தான் பயன்கொள்ள முடியும் (377)