பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

'தெய்வம் தொழாஅள்” குறளும் இதுபோன்று எடுத்துக்காட்டு அணியால் அமைந்தது. தொழுது எழுவாள் மிகவும் இல்லறப் பயன் தருபவள். விரும்பிய வற்றை விரும்பியவண்ணம் தரும் பயனுடையவள், இதனைக் குறிக்க.

"பெய் என்றதும் உடனே மழை

பெய்தால் எந்த அளவு பயனோ அது பகுத்தறிவு

போன்றவள் கற்புடையவள்’ என்பது முனை

பொருள். -

இப்பொருளை வைத்தே திருவள்ளுவர் ! 8 இக்குறளை எழுதினார். இவ்வாறு பொருள் கொள்வதற்கு அவரே மற்றோரிடத்தில் சான்று வைத் துள்ளார்.

'வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால், வீழ்வார்க்கு - வீழ்வார் அளிக்கும் அளி' -. - Il 192

என்னும் இக்குறள் காதலர் தமக்குள் வழங்கிக்கொள்ளும் அன்பின் பயனைக் குறிப்பது. அப்பயன் உலகில் வாழ்வார்க்கு வேண்டும்போது வானம் மழைப்பயனைத் தருவது போன்றது என்பதை வாழ்வார்க்கு வானம் , பயந்தது அற்று (போன்றது) என்று உவமையாகக் காட்டு கிறது.

இதிலுள்ள வாழ்வார்க்கு வானம் பயப்பது போல என்னும் உவமையே 'பொய்யெனப் பெய்யும் மழை" என்னும் உவமையாக தெய்வம் தொழாதவளுக்கு அமைந்தது.

கற்புடையவர் பெய் என்றால் மழை பெய்யும் என்பது போருள். இது அறிவிற்குப் பொருத்தமும் அன்று.