பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 23

தளப் பார்வையுடன் திருவள்ளுவப் பகுத்தறிவை அனுகலாம்.

'திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை என்பது திருவள்ளுவம் முழுக்கப் பகுத்தறிவு நூல் என்று கொள்வ தன்று. அப்படியொரு தவறானமுடிவுடனோ நோக்குடனோ இங்கு அணுகப்படவில்லை. 'இடம் அறிந்து, மிக நுணுக்கமான பார்வையில் திருவள்ளுவர் அங்கங்கு பகுத்தறிவைக் குறிப்பாக வைத்துள்ளார்' என்பதே இங்கு அணுகப்படும் முறை. அதனால்தான் திருவள்ளுவத்தில் பகுத்தறிவு” என்று தலைப்பிடாமல் பகுத்தறிவு முனை’ என்று கொள்ளப்பட்டுள்ளது. இந்த முனையும் முனைப்பு என்ற கருத்தில் அன்று. கூர்த்த முனை போன்று கருத்துக் களின் கூர்மையைக் கருத்தில் தான். -

இனிக் கொள்கைகளுக்குள் புகலாம்.