பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 51*.

தங்கை தாமரையினாள் சோம்பல் இல்லாதவன் தாளில் அடங்கிவிடுவாள்.

'மடியுளாள் மாமுகடி என்ப; மடியிலான்

"தாள் உளாள் தாமரையி னாள்' (617).

என்று திருவள்ளுவர் தாமரையினாளாம் பெண்மைக். கடவுளைச் சோம்பலற்றவன் முயற்சிக்குள் அடக்கினார். தாள் என்பதற்கு ஆள்வினை-முயற்சி என்றும் பொருள்; கால் என்றும் பொருள். நேரடியாக அப்படிச் சொல்ல வில்லை என்றாலும் அதன் குறிப்புப் பொருள் தாமரை யினாளாம் திருமகள் சோம்பலற்றவள் காலுக்குள் அமை வாள் என்பதுமாகும். வணங்கத்தக்க பெண்மைக் கடவுள் மன்னன் அடியில் அமைக்கப்பட்டமை நினைக்கத்தக்கதே.

திருமகளைச் செய்யவள்’ என்றும் பகுத்தறிவு :திரு” என்றும் குறிப்பார். திருமகள் முனை திருவாகப் பின்வரும் குறட்பாக்களில் எவ்வெவ்வாறு அமைக்கப்பட்டுள்ளாள்? 5

'அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சாரும்

திறனறிந்து ஆங்கே திரு’ (179)

'வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக

கினைப்பானை நீங்கும் திரு’’ (519)

'இரு மனப் பெண்டிரும் கள்ளும் கவறும்

திருநீக்கப் பட்டார் தொடர்பு' (920) எனும் குறட்பாக்களில்