பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

'அறிவுடையாரைச் சாரும்”

நினைப்பானை நீங்கும்’

தொடர்பு நீங்கப்படும்’

எனச் சார்வதும் நீங்குவதுமான துணையாகிறதே அன்றி தொழத்தகும் தகுதியில் அறிமுகமாகவில்லை. இவ்வறு புகுத்துப்பார்த்துக் கூறியுள்ள முனைகளையும் கவனத்திற் கொள்ள வேண்டும். -

சாவம் பெறும் நான்முகன்

படைக்கும் கடவுளான நான்முகன் பகுத்தறிவு

திருவள்ளுவரால் உலகியற்றியான் என்று முனை குறிக்கப்பட்டுள்ளதாகச் சொல்வர். அவர் எத்தகுதியில் அமைக்கப்பட்டுள்ளார்? 6

'இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான் (1062)

என்றதில் உலகியற்றியான் பரந்து கெடுக” என்பது நான்முகக் கடவுளைச் சாவம் பெறும் அளவில் தள்ளி யுள்ளது. இஃதும் பகுத்தறிவு முனையைச் சாரும்.

மற்றொரு சிறு கடவுள், உடலையும் உயிரையும் கூறு போட்டுப் பிரிக்கும் கூற்றுவனாம் எமன். அவன் எவ்வாறு திருவள்ளுவரால் அமைக்கப்பட்டான்?

'எமன் கண்டால் பொல்லாதவன் விடமாட்டான்; சாம்பசிவ பக்தனென்றால் தொடமாட்டான்'