பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

உயர்ந்த பொருளாகிய கடவுகளைக் காட்டிப் பாடியுள் ளார்; இதனால் இது கடவுளரைத் தாழ்த்தியதாகாது. இவ்வாறு சொன்னால் ஓர் அமைதி போலப் பட்டாலும் அமைந்துள்ள அத்துணை இடங்களிலும் சமநிலையும், சற்றுச் சரிவு நிலையும் தென்படுகின்றமை அந்த அமைதி யைக் கலைத்து விடுகிறது.

வேறு பல வகையிலும் மன்னன் முதலியோரின் பெரு மையைக் காட்டும் வல்லமையுள்ள திருவள்ளுவர் பகுத் தறிவு முனையில் பாடுகிறார் என்றால் கடவுளரைக் காட்டாமலே விட்டிருக்கலாமே? ஏன் கடவுளரை அண்டி இழுத்து அமைத்தார்? இவ்வாறு வினவலாம்,

மாந்தர்க்கு அறிவிக்க வேண்டிய கருத்தைத் தெளி வாகப் புரிய வைக்க், அவர்கள் நன்கு அறியுமாறும் மனம் பற்றுமாறும் புகுத்தப்பட்டுள்ள கடவுட் கருத்தைக் காட்டி னார். இதனால் திருவள்ளுவர் கடவுளை விளம்பரம் செய் பவர் ஆகார். முன்னர்க் கூறிய பாவேந்தர் பாரதிக்காகத் விரும்பாத கருத்தையும் பாடிய அணுகுமுறைதான் இதற் கும் பொருந்தும்.

வையத்துப் பேய்

கடவுள் மறுப்புக் கொள்கையரை வன்மையாகச் சாடு வதற்குப் பலர் பயன்படுத்தும் குறள்.

'உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும்’ - (850)

என்பதாகும். இக்குறள் புல்லறிவாண்மை’ என்னும் அதிகாரத்தில் அமைக்கப்பட்டது. இறைவனைத் தொழக் கூறும் முதல் அதிகாரத்தில் அன்று’ என்பதை முதலில் காண வேண்டும். -