பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் . 55

பின் ஏன் இக்குறளில் உள்ள 'உலகத்தார் உண்டு:

என்பதற்குக் கடவுள் உண்டு என்னும் கருத்து கொள்ளப்

பட்டது?

இதற்குப் பரிமேலழகர் உரைவிளக்கமே கரணியம்,

'கடவுளும் மறுபிறப்பும் இருவினைப் பயனும் முதலாக உள என்பன பலவேனும் சாதி பற்றி உண்டு என்று கூறினார்' என்று உண்டு என்பதற்கு கடவுள்' என்று எழுதிய விளக்கமாகும். .

பிற உரையாசிரியர்கள்,

'உலகத்தில் அறிவுடையார் பலர்

உண்டு என்பதாகிய ஒரு பொருளை இல்லை என்று சொல்லும் அவன்’’.

- மண க்குடவர்

'உலகத்து அறிவுடையார் பலரும்

உண்டு என்பதொரு பொருளை’’

os பரிப்பெருமாள்یہیی-بی،

'பெரியோர் உள்ளதென்று சொல்லுவதை'

-பரிதியார்

'திருந்திய கேள்வியின் உயர்ந்தோர்

தெரிந்து உண்டு என்னும் மெய்ப்பொருளை’

- காலிங்கர்

என எவரும் கடவுளைக் குறிக்காமை கவனத்திற்கு உரியது. 'காலிங்கர்’ என்பார் சற்று விரிவாக, செப்பமான கேள்வி யறிவால் உயர்ந்தோர்' என்றும் அவர் ஆராய்ந்து’ தெரிந்து) என்றும் விளக்கி உண்டு என்னும் மெய்ப் பொருளை ஏற்றார்.