பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

'வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்” (50)

என்றமை, தெய்வத்தை மாந்தன் பட்டியலில் சேர்ப்பதா கிறது.

இவ்வாறாக

மாந்தனுக்கு அடுத்தபடியாக, தொழப்படாத தள்ளுபடியாக, வரித்துகட்டும் தோழனாக, இல்லறத்தாள் காப்பாற்றும் இரண்டவதாக, மாந்தனுக்குச் 5F【f)【Dfs g; -

மாந்தனாக காட்டியுள்ளமை கொண்டு திருவள்ளுவர் தெய்வத்தை எத்தகைய துலாக்கோவில் மாந்தனுடன் வைத்துச்

சீர்தூக்கிக் காட்டியுள்ளார் என்பதனை உணரவேண்டும், இவ்வமைப்பு முறையும்.ஒரு பகுத்தறிவு முனையாகும்.

செம்பொருள் என்றால்

இறைவன், கடவுள், தெய்வம் என்னும் மூன்றினையும் திருவள்ளுவர் மேற்கொண்டு கூறியுள்ள இடங்கள் இவை யன்றி வேறு இல்லை. முதல் அதிகாரத்தில் தொழத்தக்க தாகக் காட்டியமை ஓர் ஏற்றமே. மற்ற வகையிலும் சமமும் இறக்கமுமேயாகும். மற்றுமொன்றையும் இங்கு கண்டு, இப்பகுதியை நிறைவு செய்யவேண்டும். அது 'செம்பொருள்' என்றது.