பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

தொடர்ந்து பரிமேலழகர் எழுதினார் :

'அவற்றுள் ஒழுக்கமானது அந்தணர் முதலிய

வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய கிலைகளினின்று அவ்வ வற்றிற் கோதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்” -

-என்றதில் ஒழுக்கம் பார்ப்பனருக்கும் வலியுறுத்தப் பட்டுள்ளது. ஆனால், மனுநூலோ மற்றோரிடத்தில் முன்கண்டபடி பார்ப்பணன்கூட குல ஒழுக்கங்கெட்டாலும் அறம் சொல்லலாம் என்கின்றது. இது முன்னுக்குப் பின் முரண். இந்த முரண் வேண்டுமென்றே அமைக்கப்பட்டது என்பதை முன்கண்ட தொடரைத் தொடர்ந்து வரும் கருத்தை இங்குக் காண்பதால் அறியலாம்.

'பார்ப்பனன்கூட' என்று கூட போட்டு அடுத்து,

'ஆனால், தான்காம் வருணச் சூத்திரன் மட்டும் நீதி வழங்கக் கூடாது. இதைமீறிச் சூத்திரன் நீதி செய்தால் தடுச்சேற்றில் அகப்பட்ட பசுவைப் போல நம் கண் முன்னே துன்பம் அடையும். என்கிறது மனுநூல். ஆம். சூத்திரனைத் தாழ்த்துவதற்காகவே, அறம் செய்யத் தகுதி யற்றவன்-எந்த நிலையிலும் தகுதியற்றவன்...... ஒழுக்கம் கெடாதவனாக இருந்தாலும் தகுதி யற்றவன் என்பதற்காகவே பார்ப்பனன் ஒழுக்கத் திலிருந்து தவறலாம் என்றும் முரணாகக் கூறியது மனுநூல். * . . . ...