பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

போருந்தும். இடைச்செருகல் என்பதற்கு அடையாள மிருந்தால் தள்ளலாம் அன்றோ?

நால்வகைச் சாதி அடையாளங்களைக் கூறும் நூற். பாக்கள் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் நூற்பா 612 முதல் 629 முடிய உள்ளவை. 612-க்கு முன்னரும் 629-க்குப் பின்னரும் எவ்வகைக் கருத்துக்கள் உள்ளன என்று பார்வையிட்டால் ஓர் உண்மை புலப்படும். x

611 வரை உள்ளவை பலவகை மரபுச் சொற்களைப் பொருளுடன் குறிக்கின்றன. 630ஆம் நூற்பாவில் மீண்டும்

'புறக்கா ழனவே புல்எனமொழிய'

என்று மரபுச்சொல் தொடர்கின்றது.

இதனைத் தொடர்ந்து மரபுச் சொற்கள் உள்ளன? இடையில் நால்வகைச் சாதிச் சின்னங்களும் கடமைகளும் வந்தன? ஏன் வர வேண்டும்? தொடர்ச்சியை வெட்டிவிட்டு இடையே பொருத்தமற்றுப் புகுந்துள்ளன. இடைவெட்டு பளிச்சிட்டுத் தெரிகின்றது. .

எனவே,

சாதிப் பிரிவையும், அவற்றிடையே வேறுபாட்டையும், அவற்றிலும் பார்ப்பனருக்குச் சீரையும், முதலிடத்தையும் தரும் உள்நோக்கில் புகுத்திப் பதியவைக்கும் செயலே நேர்ந்துள்ளது. இடைச்செருகல் என்பது தெளிவா கின்றது. - -

வைசிகன் புகுந்தான்

இத்தெளிவிற்கு உறுதி ஊட்டுவதாக இப்பதினெட்டு நூற்பாக்களில் ஒரு நூற்பா உள்ளது.