பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

சிலம்பில் சான்று

இவ்வகை நோக்கத்தாரின் இடைச்செருகல் மேலும்

ஆழமாகத் தொடர்ந்தது. இதற்கு ஒரு சான்றாகச்

சிலப்பதிகாரம் நம்முன் நிற்கிறது.

'விரிகுடை தண்டே குண்புகை காட்டம் பிரியாத் தருப்பை பிடித்த கையினன் நாவினும் மார்பினும் கவின்ற நூலினன்'1

இவ்வடிகள் சிலம்பில் உள்ளவை. இதில் பார்ப்பனராம் முதல் சாதியாருக்குரிய அடையாளப் பொருள்களாக குடை, முக்கோல், நீர்க்கெண்டி, காட்டம் என்னும் சமித்து (அஃதாவது வேள்விக்குழியில் நெய்யிட்டு தீ வளர்க்கப் பயன்படுத்தும் அரசு, மா மரத்துக் குச்சிகள்) கையை விட்டு நீங்காத தருப்பை, நாவில் நான்மறை நூல், மார்பில் பூணுரல்களாகக் காட்டப்பட்டுள்ளன.

தொல்காப்பிய இடைச் செருகவில் காட்டியவற்றின் மேலும் இதில் குடை கூறப்பட்டது. காய்ந்த குச்சிகள், குறிப்பாகத் தருப்பை, நான்மறை காட்டப்பட்டுள்ளமை நோக்கத்தக்கது. நூல் என்று பொதுவாகச் சொன்னால் பூணுாலா (?) நான்மறை நூலா(?) என்னும் ஐயம் வரா திருக்க இரண்டும் தனித்தனியே காட்டப்பட்டுள்ளன. முன்னிலும் விரிவான பதிவுகள் இவை. கையை விட்டு அகலாத தருப்பைப் புல் ஒரு முத்திரைப் பதிவு அன்றோ?

இவ்வடிகள் அழற்படு காதையில் உள்ளவை என்று கண்

டோம். அக்காதையில் எங்கு உள்ளன? எக் கருத்தில் உள்ளன? - -

1. இளங்கோவடிகள் : சிலம்பு : அழற்படுகாதை

31–33. - . - -