பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் . . 85.

வெற்று முயற்சியற்றது. இதனை விடுத்து நச்சர் புதுப் படைப்பு செய்துள்ளமை அவரையே ஐயத்திற்குள்ளாக்கு கிறது.

நச்சினார்க்கினியர் பெரும்புலமையர்; ஆ ழ் ந் த. நுண்ணறிவினர். அவர் உரையால் பல இலக்கியங்கள் பொலிவுற்றன. உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க் கினியர்' என்று போற்றப்படுவது பொருந்தும். உண்மை யாகவே அவர்தம் உரைப்பணி பாராட்டிற்கும், வணக்கத் திற்கும் உரியது அவர்மேல் குறை எழுத கையின் எழுதுகோலும் கூசுகிறது. ஆனால், அவர் பொருள் கொண்டதற்கு உரிய நோக்கம் எழுதுகோவின் கூச்சத்தை, விரட்டி கை எழுதுகோலுக்கே தினவேற்றுகிறது

இதனை உணர இவ்விரு சொற்களின் (அந்தம் அணவுதல்) பொருள்களைக் காணவேண்டும்.

அந்தம் என்றால் முடிவு - இறுதிநிலை. பொதுவாக இங்கு அனைவரின் வாழ்வுக் குறிக்கோளின் இறுதி நிலையை, சிறப்பாக ஆன்மீகரின் அல்லது துறவியரின் இறுதிக் குறிக்கோளைக் குறிக்கும். . -

'அணவுதல்' என்றால் கிட்டுதல், பொருந்துதல், சேர்தல் எனப் பொருள்படும். - -

அணவுதல்’ என்பதற்கு மறுபொருள்கள் தலைதுாக்கல், அண்ணாத்தல், மேலமைதல், மேல்நோக்கல், மேலே கவிதல் என்பன. இப்பொருள்களையும் இலக்கிய ஆட்சி யில் காண்கின்றோம். நச்சினார்க்கினியர் இம்மறுபொருள் களில் கருத்துான்றிப் பொருளைப் படைத்தார். இக் கருத்துான்றல்தான் அவரின் உள்ளுணர்வை அடையாளங் காட்டுகிறது. அவர் எழுதியுள்ள பொருள் மூன்று இடங் களில் வருகின்றது. அவற்றைக் கூர்ந்து நோக்கினால் அவர்