பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கருத்திலும் கடையிலும் ஒப்புயர்வற்று விளங்கும் நூல் களில் தலையாயதான திருக்குறள், அங்காட்டிற்குரிய நூல் களில் ஒரு பகுதியா யிருப்பதாலும், மிகவும் உண்மையான தனிச் சிறப்பு வாய்ந்திருப்பதாலும் நமது கருத்தை ஈர்க்க வல்லதாயிருக்கிறது. சிற்சில வகுப்பினர்க்கு மட்டும் உரிய வாய உண்மைகளைப் பொருட்படுத்தாது ஒதுக்கி, மக்கள் யாவருக்கும் ஒருங்கே அமைவனவாய உண்மைகளை மட்டுமே தம் நூலில் ஆசிரியர் எடுத்துக் கூறியுள்ளார்; இதல்ை மறு நூலிலும் ஏனைய சாத்திரங்களிலும் காணப்படும் பல சுவை யற்ற பழக்க வழக்கங்கள் இடம் பெருமல் நீக்கப்பட்டு நூல் கட்ை ப்ொதுவில் ஒரு மேன்பாட்டையடைந்து பொலிகிறது. - ரெவரெண்டு டப்ளியூ. எச். ட்ரூ கடவுளுண்மையை நிலைநாட்டுவதற்கும், பார்ப்பனர்கள் பின்பற்றி வந்த சடங்கு மலிந்த பல - தெய்வ வணக்கத்தைக் கண்டிப்பதற்கும் திருவள்ளுவரையும் சிவவாக்கியரையும் ஒத்த பெரியார்தம் சொல்வன்மையையும் எழுதுமாற்றலையும் பயன்படுத்தி வந்தனர். 'இலியட்' 'ஈனிட் டிவைன் காமெடி' 'பாரடைஸ் லாஸ்ட்' 'கிபெலங்கன் லிட்' முதலிய பல நாட்டுக் காவியங்களைக் கற்றுணர்ந்தோர், திே கள் மலிந்த ஒரு தொகை நூலே மூன்று கோடி மக்கள் தங்களுடைய வேதமாக எடுத்துக் கூறிப் பெருமை பாராட்டிக் கொள்வதை நம்பாமலிருக்க முடியாது. கிரேக்கர்களிடம் ஹோமர் திகழ்ந்தது போலத் தமிழர்களிடம் திருவள்ளுவர் திகழ்ந்தார் என்பது மறுக்க முடியாததோர் உண்மையாகும். திருக்குறள் ஒரு கல்விக் களஞ்சியம். பாவலர்க்குறுதுணை. ஒப்புயர்வற்ற சொற்றிறம் நிறைந்த ஒழுக்க நூல். திராவிடர் (தமிழர்)களின் மனப்போக்கு உயரொழுக்கத்தையே காடி மின்றது என்பது (அதல்ை)தெற்றென விளங்கும். தமிழ்ப்பெரு மக்களிடை இத்தகைய கல்லொழுக்க மனப்பான்மை குடி கொண்டிருந்த தேைலதான் புத்தமதம் இந்நாட்டில் கால் கொள்ளவும், கால்கொண்டு திகழவும் நேர்ந்தது என்று