பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவாலயம் 19 ஊகித்தல் தவருகுமோ? திருவள்ளுவர், சிவவாக்கியர், கபிலர், ஒளவை, இன்னும் இவர் போன்ற ஏனைய பண்டைத் திராவிட (தமிழ்)ப் புலவர்களின் நூற்பாங்கை விளக்க வந்த பார்ப்பனர்கள், அவர்களெல்லாம் சமணர்கள் என்று வற் புறுத்திக் கூறுவாராயினர். இதற்கு எத்தகைய சான்றும் கிடையாது, ஆளுலுைம், புத்த மதமும் சமண மதமும் பண்டைத் தமிழ்ப்புலவர்களின் உளப்போக்கையே உட்கொண்டிருந்தன வென்பதை எளிதில் ஐயுற முடியாது. நெருப்பினாலும், போரிலுைம், இரக்கமற்ற கொடுமையிலுைம் பார்ப்பனர்கள் இந்தியாவில் புத்தமதம் பரவாதபடி அழித்தனர். இருந்தாலும், அம்மதத்தின் அடிப் படையான கொள்கைகளை அவர்களால் அழிக்க முடிய வில்லை. சமயச் சழக்கைக் குறித்தவற்றை ஓர்ந்து, ஆய்ந்து ஒதுக்கியமையினலேயே திருவள்ளுவர் தம் நூலே எல்லா வற்றையும் அழித்து வந்த மிண்டிய இருட் சமயவாதப் பெருஞ் சுழியிலகப்படுத்தாது காப்பாற்றினர். அந்நூலே அழிப்பதற்கு ஏற்ற எக்காரணத்தையும் பார்ப்பனர்கள் கண்டிலர். மனைவியர் தம் கணவன்மார்களை நேசிக்க வேண்டும் என்றும், மக்கள் வாய்மையும், ஈகையும், அமைதியுடைமை யும் உடையவர்களாயிருக்க வேண்டும் என்றும், அரசர்கள் தெள்ளறிவும் செந்தண்மையும் உடையவர்களாயும், குடிகள் நாணயமும், கீழ்ப்படிதலும், பிறர்க்கு உதவும் பெற்றியும் உடையவர்களாயிருக்க வேண்டும் என்றும் பணிக்கும் ஒரு புலவனை எந்தக் குருவும் குற்றங் கூற முடியாதன்ருே? யூதர்களுக்குப் பத்துக்கற்பனைகள் எவ்வாறு தவருெளுக் கட்டளைகளாக இருந்தனவோ, அவ்வாறே அதன் (குறளின்) கூற்றுக்கள் கட்டளைகளாகக் கருதப்பட்டு வருகின்றன. குறள்மணிகள் செந்தமிழின் தூய உயர்நடைக்கு எடுத்துக் காட்டாக இலங்குகின்றன. இத்தாலி மொழிக்கும், கருத்து