பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் 'உலகம் பயந்த பேரறிஞர்களிற் றிருமயிலை நெசவான ரும் ஒருவர். முற்ற முடிந்ததாய் அவர் எழுதிய ஒரே தனி நூலாகிய அது காலச் சுழலிடைப்பட்டும் கறை ஏதும் எய்தா மலும், கருத்தை ஈர்க்க வல்லதான எத்தகைய பாட பேதமும் இல்லாமலும் தலைமுறை தலைமுறையாக இருந்து வந்துள்ளது.' நூற்சிறப்பில் அது (குறள்) மற்ற எல்லாத் தமிழ் நூல் களையுந் தாழ்த்தித் தான் உயர்ந்து கிற்கிறது. ஒரு காட்டு மச்களின் உள்ளத்தினுள்ளே, உயிரினிலே இடங் கொண்டுள் ளனவும், என்றென்றும் மாயது திகழ்வனவுமாகிய ஒரு சில பெரு நூல்களில் அதுவும் ஒன்று. அடக்கமுடைமையும், ஈகையுடைமையும், இன்ன செய் தார்க்கும் இனியவே செய்யும் சான்ருண்மையான ப்ொறை யுடைமையும் அரிஸ்டாடி'லால் கூறப்படவில்லை என்று சர். ஏ. கிரான்ட் என்பவர் கூறுகிறர். இம்மூன்றும் நூல் வாங்கணும் பசுமரத்தானிபோல இத்தமிழ் ரீதிநூலாரால் அறையப்படுகின்றன. - குறளுக்கு எய்திய பெருமைக்குத் தலைமையான காரண மாயிருப்பது அதன் சொலற்கரிய அழகு வாய்ந்த செய்யுள் ாடையே யாகும். குறட் பாவி லமைந்த தல்ை உண்டாகிய சொற் சுருக்கம் செங்ாாப்போதாரின் உரைகளுக்குத் தெய்வத் தன்மையை அளிக்கின்றன. அவை பொறுக்கி எடுத்த திே யுரைகள். கிரீசில் பாடப்பட்ட பாட்டுக்களுக்கும் இதற்கும் பொருளிலும் கருத்திலும், பாடப்பட்ட காலத்திருந்த குடியிய லிலும் ஒற்றுமை காணப்படுவது வியப்பை அளிப்பதாகும். கிரேக்கக் குறுஞ் செய்யுளுரைகளிலும், 'மார்ஷல்' உரைகளி லும், இலத்தீன் மொழியிலுள்ள இயற்கைச் செய்யுட்களிலும் குறளிற்றிகழும் பண்பு கலங்களிற் சிற்சில காணப் படுகின்றன.