பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் 12. தொல்காப்பியர் மொழிபொருளைப் பொன்னேபோல் போற்றிய பொருள்நிறை புலவர். (மறைமொழி இன்னதென்பது) 'நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திர மென்ப.' (தொல்காப்பியம்) 'நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். (தி. கு. 28) (மக்களின் இலக்கணம்) "உயர்திணை என்மனர் மக்கட் சுட்டே அஃறிணை என்மஞர் அவரல பிறவே ஆயிரு திணையின் இசைக்குமன் சொல்லே.' "மாவும் மாக்களும் ஐயறி வினவே பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே." "மக்கள் தாமே ஆறறி வுயிரே பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே.' (தொல்காப்பியம்)