பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7:6 திருவள்ளுவர் நூல்கள் இடம் பெறும் மாபெரும் நூல்நிலையம் உடையதும், இன்னும் பல சிறப்புகள் உடையதுமான பெரிய ஆலயமாக விளங்க வேண்டாமா? அப்படி அமைந்தால்தான் திருவள்ளு வருக்கு - அவர் மேதைக்கு - தகுந்த நினைவுச் சின்னமாகும். அத்தகைய வசதியுடைய நினைவுச் சின்னம் அமைக்கத் தக்க இடம் கன்னியாகுமரிப் பகுதியே என்று யான் தீர்மானித் தேன். அதை, சிங் த னை தோன் றிய வி தம்' என்னும் பிரிவில் குறிப்பிட்டிருக்கிறேன். திருவள்ளுவர் அறிவு ஆலயம் அதன் அமைப்பு முறைகள் அறிவாலயம் சுமார் மூன்று மைல் சுற்றளவுள்ள கோட்டைக்குள் அமைய வேண்டும். ஆலயம் மூன்று பெரிய மாடிகள் கொண்டதாய், அறம் பொருள், இன்பம் என்னும் பெயர் தாங்கியதாய், அவ்வவ் மாடி களின் உட்புறச் சுவர்களில், அவ்வப் பால்களின் குறள்கள் வர்ண எழுத்துக்களால் எழுதப்படும் வசதியுடையதாய் இருக்கவேண் டும். சித்தரிக்க வசதியுடைய குறள்களை விளக்கும் சித்திரங் களும் அமைதல் நலம். ஆலயத்தின் மூன்று மாடிகளுஞ் சேர்ந்து 330 அடி உயரம் இருக்கவேண்டும். 1330 குறள்களையும் நினைவுறுத்தும் முறையில் 1330 சிறு சிறு அலுவல் அறைகளும், 1330 தூண் களும், 1330 படிகளும் அதில் அமைய வேண்டும். ஆலயத்துக் கோட்டைச் சுவர்களின் உட்புறத்தில் கோட்டைச் சுவரைச் சேர்ந்து 1330 வீடுகள் சுற்றிலும் அமைந்து இருக்க அறிவாலயம் கடுநாயகமாய் இலங்கும். அந்த 1330