பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவாலயம் 81 அறிவாலயமும் திருவள்ளுவர் சபையும் உலகத்தில் எத்தனையோ சபைகள், சங்கங்கள் செயல் பட்டு வருகின்றன. ஆனல், உலக மாதாவின் தனிப்பெரும் மகன் திருவள்ளுவர் பெயரால், உகல மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு சபை ஏற்படாதிருப்பது ஒரு பெருங்குறையே. 'திருவள்ளுவர் உலகப் பொது ச் சபை' என்னும் பெய ரால் ஒரு சபை ஏற்படுத்தி, நடத்தி வரவேண்டும். அச்சபையின் த லை மை ஸ் தா ன ம் அறிவாலயத்தில் இருக்கும். கிளைச் சபைகள் பல நாடுகளிலும் அமைக்கப்மட்டிருக் கும். வருஷம் ஒரு முறை ஒவ்வொரு நாட்டிலும் ஆண்டு விழாக் கொண்டாடப்படும். பத்தாண்டுகளுக்கு ஒரு முறை உலகமக்கள் அனைவரும் அறிவாலயத்தில் ஒன்றுசேர்ந்து ஒரு விழாக் கொண்டாடப்படலாம். 轟 அது சமயம் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் பிரதிநிதிகள் வந்திருந்து உலக ஒற்றுமை வளர்ச்சியைப்பற்றிய அறிக்கையைச் சமர்ப்பித்து, மேற்கொண்டு செய்ய வேண்டியவைகளைத் திட்ட மிடுவது கலம் பயக்கும். தலைமை ஆலயமும் கிளை ஆலயங்களும் அறிவாலயமும், கிளை ஆலயங்களும் தொடர்புடையன வாய் இருக்கவேண்டும். ஒவ்வொரு ஊர் அல்லது நகரிலும் திருவள்ளுவர் ஆலயம் அமைய வேண்டும். அவ்வாலயத்தில் குறள் ஓதப்படும். ஒது வா மூர்த்திகள் குறளைக் கருத்துச் சிதையாத முறையில் இராகமும் தாளமும் அமைத்துப் பாடுவார்கள். ஒவ்வொரு நாளும் மாலை எட்டு மணிக்கு இது நடைபெறும். சமய ஆலயங்களில்போல் பூஜை நைவேத்தியங்கள் நடைபெரு. சமய சாதி வேற்றுமை காரணமாகச் சிலர் சமய