பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பயனில சொல்லாமை

லில் பயன் இலா சொல் சொல்லற்க-சொற்களில் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாதொழிக.

இது, பயனில சொல்லாமை வேண்டு மென்றது. ௩௨௧.

யனில பல்லார்முன் சொல்லல், நயனில
நட்டார்கண் செய்தலின் தீது.

இ-ள்:- பயன் இல பல்லார் முன் சொல்லல்-பயன் இல்லாத சொற்களைப் பலர் முன்பு கூறுதல், நயன் இல நட்டார் கண் செய்தலின் தீதே-நன்மை யில்லாதவற்றை நட்டார் மாட்டுச் செய்தலினும் தீதே.

[நன்மை இல்லாத-தீய செயல்கள். தீதே என்பது தேற்றேகாரம் கெட்டு நின்றது.]

இது, பயனில கூறல் இம்மை மறுமை இரண்டின் கண்ணும் தீமை பயக்கு மென்றது. ௩௨௨.

யனிலன் என்பது சொல்லும், பயனில
பாரித் துரைக்கும் உரை.

இ-ள்:- நயன் இலன் என்பது சொல்லும்-நயனுடையன் அல்லன் என்பதனை அறிவிக்கும், பயன் இல பாரித்து உரைக்கும் உரை-பயனில்லாதவற்றைப் பரக்க விட்டுச் சொல்லும் சொற்கள்.

இது, பயனில சொல்லுவார் இம்மையின் கண் பிறரால் இயம்பப்படா ரென்றது. ௩௨௩.

யன்சாரா நன்மையின் நீங்கும், பயன்சாராப்
பண்பில்சொல் பல்லார் அகத்து.

இ-ள்:- பயன் சாரா பண்பில் சொல் பல்லார் அகத்து-ஒரு பயனைச் சாராத பண்பில்லாச் சொல்லைப் பலரிடத்து (க் கூறுவானாயின்), நயன் சாரா நன்மையின் நீங்கும்-அவன் நடு சாராது நன்மையின் நீங்குவான்.

௧௧௭