உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கைத் துணைநலம்

இ-ள்:- மனை தக்க மாண்பு உடையளாகி - தான் பிறந்த குடிக்குத்தக்க ஒழுக்கத்தை உடையாளாய், தன் கொண்டான் வளம் தக்காள் - தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க செலவினையுடையவள், வாழ்க்கை துணை - இல்வாழ்க்கைக்குத் துணையாவள்.

இது, வாழ்க்கைத் துணையின் இலட்சணம் கூறிற்று. ௫௧.

னைமாட்சி இல்லாள்கண் இல்லாயின், வாழ்க்கை
எனைமாட்சித் தாயிலும் இல்,

இ-ள்:- மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் - குடிக்குத் தக்க ஒழுக்கம் மனையாள்மாட்டு இல்லையாகில், வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் - இல்வாழ்க்கை எத்தனை நன்மைகளை உடைத்தாயினும், இல் - ஒரு நன்மையும் இன்றாம்.

இஃது, அவளிடம் நன்மை யில்லையாயின் இல்வாழ்க்கையின் எல்லா நன்மைகளும் கெடு மென்றது. ௫௨.

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும்? மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

இ-ள்:- சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் - (மகளிரைச்) சிறைசெய்து காக்கும் காவல் யாதினைச் செய்யும்? மகளிர் நிறை காக்கும் காப்பே தலை - மகளிரது கற்புக் காக்கும் காவலே தலையான காவல்.

இஃது, அவள் தனது கற்பால் தன்னைக் காத்தலே காவலாமென்றது. ௫௩.

பெண்ணின் பெருந்தக்க யாவுள, கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

இ-ள்:- பெண்ணின் பெருந் தக்க யா உள - பெண்பிறப்புப் போல மிக மேம்பட்டன யாவை யுள, கற்பு என்னும் திண்மை உண்

௨௧