பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற வியல்

இஃது, அமிர்தமே யெனிதும் விருந்தினருக்கு அளியாது தான் உண்ணலாகா தென்றது. ௮௨.

ருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.

இ-ள்:- வைகலும் வரு விருந்து ஓம்புவான் வாழ்க்கை - நாள் தோறும் வந்த விருந்தினரைப் போற்றுவானது ஆக்கம், பருவந்து பாழ்படுதல் இன்று - வருத்தமுற்றுக் கேடுபடுவ தில்லை.

இது, நாள்தோறும் விருந்தினரை ஓம்புவானது இல்வாழ்க்கை கேடுறா தென்றது. ௮௩.

கனமர்ந்து செய்யாள் உறையும், முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல்.

இ-ள்:- செய்யாள் அகன் அமர்ந்து உறையும் - திருவினாள் மனம் பொருந்தி உறையும், நல் விருந்து முகன் அமர்ந்து ஓம்புவான் இல் - நல்ல விருந்தினரை முகம் பொருந்திப் போற்றுவானது மனையின் கண்.

இது, விருந்தோம்புவார்க்குக் கேடின்மையே யன்றிச் செல்வமும் உண்டாம் என்றது. ௮௪.

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்?

இ-ள்:- விருந்து ஓம்பி மிச்சில் மிசைவான் புலம் - விருந்தினரை ஊட்டி மிச்சமான உணவை உண்ணுமவன் புலத்தின்கண், வித்தும் இடல் வேண்டுமோ - (விளைதல் பொருட்டு) விதைக்கவும் வேண்டுமோ ? (தானே விளையாதோ)? [கொல் - அசை.]

இது, விருந்தோம்புவான் பொருள் வருவாயாக இயற்றும் இடம் நன்றாகப் பயன்படு மென்றது. ௮௫.

௩௨