பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொல்லாமை

யற்க - பிறிதொன்றினுடைய இனிய உயிரை நீக்கும் தொழிலினைச் செய்யற்க.

உயிர்க்கேடு வருங் காலத்து நோய் மருந்தாக ஊனை உடகொள்ளற்குக் கொல்லுதல் குற்றமன் றென்பார்க்கு இது கூறப்பட்டது. ௧௭௧.

ல்லா றெனப்படுவ தியாதெனின், யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.

இ-ள்:- நல் ஆறு எனப்படுவது யாதெனின் - நல் வழி என்று சொல்லப்படுவது யாதென வினாவின், யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி- யாதோர் உயிரையும் கொல்லாமையைச் சிந்திக்கும் வழி (என்க).

இது, நன்னெறியாவது கொல்லாமை யென்றது. ௧௭௨.

ன்றாக நல்லது கொல்லாமை; மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.

இ-ள்:- ஒன்றாக நல்லது கொல்லாமை; - இணையின்றாக நல்லது கொல்லாமை; அதன் பின்சாரப் பொய்யாமை நன்று-அதன் பின்பே அணையப் பொய்யாமை நன்று,

[ஒன்றாக-இரண்டாவதின்றாக - இணையின்றாக. நல்லது-நல்லஅறம். மற்று என்பது அசை.]

இது, பல் அறங்களினும் பொய்யாமை நன்று; அதனினும் கொல்லாமை நன்றென்றது. ௧௭௩.

றவினை யாதெனின் கொல்லாமை. கோறல்
பிறவினை யெல்லாம் தரும்.

இ-ள்:- அறவினை யாதெனின்- நல்ல வினை யாதெனின், கொல்லாமை-கொல்லாமை (என்க), கோறல் எல்லா பிறவினையும் தரும்-கொல்லுதல் எல்லாத் தீவினைப் பயனையும் தருமாதலான்.

௬௩