பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற வியல்

ருணி நீர்நிறைந் தற்றே, உலகவாம்
பேரறி வாளன் திரு.

இ-ள்:- ஊருணி நீர் நிறைந்த அற்றே - ஊராரால் நீருண்ணப்படும் நீர் நிலை நீர் நிறைந்த தன்மையே போலும், உலகு அவாவும் பேர் அறிவாளன் திரு-உலகத்தா ரெல்லாரும் நச்சுகின்ற பெரிய (ஒப்புரவு) அறிவானது செல்வம்.

[நச்சுதல்-விரும்புதல். அவாவும் என்பது ஈற்று மிசை உகரம் மெய்யொடும் கெட்டு நின்றது. நிறைந்த என்பது ஈற்றகரம் கெட்டு நின்றது.]

இஃது, ஒப்புரவு செய்வார்க்கு உளதாகிய செல்வத்தை (நச்சிச் சென்றார்) வேண்டியவாறு கொள்ளலா மென்றது. ௨௧௬.

யமரம் உள்ளூர்ப் பழுத்தற்றால், செல்வம்
நயனுடை யான்கண் படின்.

இ-ள்:- பயமரம் ஊருள் பழுத்தால் அற்று-பயன்படும் மரம் ஊர்நடுவே பழுத்தாற் போலும், நயன் உடையான் கண் செல்வம் படின்-பிறரால் விரும்பப்படுவான் மாட்டுச் செல்வம் உண்டாயின்.

இஃது, ஒப்புரவு செய்வானது செல்வம் உபகாரம் வேண்டாதார்க்கும் பயன்படு மென்றது. ௨௧௭.

ருந்தாகித் தப்பா மரத்தற்றால், செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.

இ-ள்:- மருந்து ஆகி தப்பா மரத்து அற்று-(பிணி) மருந்தாகி(த் தேடுவார்க்கு) மறைதலில்லாத மரத்தை ஒக்கும், செல்வம் பெருந்தகையான் கண் படின்-செல்வமானது பெருந்தகைமையான் மாட்டு உண்டாயின். [ஆல் என்பது அசை.]

௭௮