பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்புரவறிதல்

டனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர்.

இ-ள்:- இடன் இல் பருவத்தும்-(செல்வம்) விரிவு அற்ற காலத்தினும், ஒப்புரவிற்கு ஒல்கார்-ஒப்புரவிற்குத் தளரார், கடன் அறி காட்சியவர்-ஒப்புரவை அறியும் அறிவையுடையார்.

இது, செல்வம் விரிவில்லாத காலத்தினும் ஒப்புரவு செய்ய வேண்டு மென்றது. ௨௧௩.

யனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயனீர்மை
செய்யா தமைகலா வாறு.

இ-ள்:- நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல்-நயனுடையான் நல்கூர்ந்தானாகின்றது, செயல் நீர்மை செய்யாது அமைகலா ஆறு-செய்தல் வேண்டுவன செய்யாதே அமையமாட்டாமை யாலே.

[நயன் உடையான்-ஒப்புரவை அறிந்தவன்,]

இது, செல்வம் குறைபடினும் அறிவுடையார் ஒப்புரவு செய்வரென்றது. ௨௧௪.

ப்புரவி னான்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோட் டக்க துடைத்து.

இ-ள்:- ஒப்புரவினான் கேடு வரும் எனின்-ஒப்புரவு செய்தலினாலே பொருட்கேடு வருமென்று சொல்லின், அஃது ஒருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து-அக்கேட்டை (க்கேடாகச் சேர்த்துக் கொள்ளல் கூடாது;) ஒன்றை விற்று ஒன்றைக் கொள்ளுகின்ற வாணிகமாகக் கொள்ளும் தகுதியை யுடைத்து.

இது, ஒப்புரவு செய்தலினால் கெட்டானாயினும் அதனை ஆக்கமாகக் கொள்ளல் தகுமென்றது, பின் பயப்பன நன்மையாதலான். ௨௧௫.

௭௭