பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபத்தெட்டாவது வாழாப் பத்து முத்தி உபாயம் (திருப்பெருந்துறை) ஆசிரிய விருத்தம் பாரொடு விண்ணாய் பரந்த எம்பரனே பற்றுநான் மற்றுஇலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத்து அரசே திருப்பெருந் துறைஉறை சிவனே ஆரொடு நோகேன் ஆர்க்குஎடுத்து உரைக்கேன் ஆண்டநீ அருளிலை யானால் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே (1) வம்பனேன் தன்னை ஆண்டமா மணியே மற்றுநான் பற்றுஇலேன் கண்டாய் உம்பரும் அறியா ஒருவனே இருவர்க்கு உணர்வுஇறந்து உலகம் ஊடுருவும் செம்பெரு மானே சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே எம்பெருமானே என்னை ஆள்வானே என்னை நீ கூவிக் கொண்டருளே ( 2 )