பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. வாழாப் பத்து பாடிமால் புகழும் பாதமே அல்லால் பற்றுநான் மற்றுஇலேன் கண்டாய் தேடிநீ ஆண்டாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே ஊடுவது உன்னோடு உவப்பதும் உன்னை உணர்த்துவது உனக்கு எனக்கு உறுதி வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே (3) வல்லைவாள் அரக்கர் புரம் எரித்தானே மற்றுநாள் பற்றுஇலேன் கண்டாய் தில்லைவாழ் கூத்தா சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே எல்லை மூஉலகும் உருவிஅன்று இருவர் காணும்நாள் ஆதிஈறு இன்மை வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே (4) பண்ணின்நேர் மொழியாள் பங்கநீ அல்லால் பற்றுநான் மற்றுஇலேன்கண்டாய் திண்ணமே ஆண்டாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே எண்ணமே உடல்வாய் முக்கொடு செவிகண் என்றுஇவை நின்கனே வைத்து மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே (5) 528