பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்பத்துமூன்றாவது குழைத்த பத்து ஆத்தும நிவேதனம் (திருப்பெருந்துறை) ஆசிரிய விருத்தம் குழைத்தால் பண்டைக் கொடுவினைநோய் காவாய் உடையாய் கொடுவினையேன் உழைத்தால் உறுதி உண்டோ தான் உமையாள் கணவா எனைஆள்வாய் பிழைத்தால் பொறுக்க வேண்டாவோ பிறைசேர் சடையாய் முறையோஎன்று அழைத்தால் அருளாது ஒழிவதே அம்மானே உன் அடியேற்கே (1) அடியேன் அல்லல் எல்லாம்முன் அகல ஆண்டாய் என்றுஇருந்தேன் கொடிஏர் இடையாள் கூறாளம் கோவே ஆ ஆ என்றுஅருளிச் செடிசேர் உடலைச் சிதையாதது எத்துக்கு எங்கள் சிவலோகா உடையாய் கூவிப் பணிகொள்ளாது ஒறுத்தால் ஒன்றும் போதுமே (2) 576